நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் வரவேற்பு போர்டுகள் தீவைத்து எரிப்பு!
நெல்லை: நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் வரவேற்பு பேனர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 20க்கும் மேற்பட்டோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையை அடுத்துள்ள கொம்மந்தானூரில் மகேஷ், மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம் அருகே குமார், கால்வாயில் செல்லத்துரை உள்பட இருவர், கரந்தாநேரியில் வேல்சாமி, மாரிக்கனி, மேலப்பாளையத்தில் மாடசாமி, சங்கரலிங்கம் என தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் நடவடிக்கை கோரி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நெல்லையிலும், ஸ்ரீவைகுண்டத்திலும் கண்டன பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.நாங்குநேரியை அடுத்துள்ள கராந்தாநேரியில் கொலை செய்யப்பட்டவர்கள் எந்த சம்பவத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகள். வழக்கமாக இவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவது அரசியல் முக்கிய பிரமுகர்கள் ,எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள், உள்ளிட்டோரின் வழக்கம்.
ஆனால் யாரும் இதுவரையிலும் கராந்தாநேரிபகுதிக்கு வரவில்லை. குறிப்பாக இந்த பகுதி நாங்குநேரி சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் இதுவரையிலும் வரவில்லை. இதனைத்தொடர்ந்து கராந்தாநேரியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமாரையும் ,நாராயணனையும் வரவேற்று பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.
அதனை நேற்று ஊர்மக்கள் கோபத்தோடு கிழித்தெறிந்து தீயிட்டு கொளுத்தினர்.மேலும் தமிழக அரசியல்வாதிகளின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்களும் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பரப்பரப்பு நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications