பெண்களை லத்தியால் தாக்கிய சென்னை போலீஸ்.. சமூக வலைதளங்களில் மக்கள் கொதிப்பு
சென்னையில் பெண்களை லத்தியால் தாக்கி அடித்த சென்னை போலீஸாரின் செயலுக்கு சமூக வலைதளத்தில் கண்டனங்கள் குவிகின்றன.
சென்னை: சென்னையில் நேற்று வெடித்த வன்முறையில் போலீஸாருக்கும் முக்கியப் பங்குண்டு என்று வெளியான செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மக்கள் கடும் கொதிப்புடன் கருத்துக்களைப் பதிவிடடு வருகின்றனர்.
ஒவ்வொருவரும் போடும் கருத்துக்களை பிரசுரிக்க முடியாது. அந்த அளவுக்கு கடுமையானவைாக உள்ளன. போலீஸாரே ஆட்டோவைத் தீவைத்துக் கொளுத்தும் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அதை விட அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது, வீடுகளில் நின்று கொண்டிருந்த பெண்களை விரட்டி விரட்டி லத்திகளால் போலீஸார் அடிக்கும் காட்சிதான். இதென்ன போலீஸா இல்லை வேறா என்று கேட்கும் அளவுக்கு சற்றும் மனிதாபிமானமே இல்லாமல் போலீஸார் நடந்து கொண்டுள்ளதாக மக்கள் குமுறல் வெளியிட்டு வருகின்றனர்.
பைக்குகளை உடைத்த போலீஸ்
Police destroying public property , video-3 #TNJallianwallahbagh #ShameOnTNPolice pic.twitter.com/u7lND7ppDb
— Vijay's future GF❤ (@DianaHartsVJ) January 23, 2017
சென்னை கடற்கரை சாலையில் உள்ள பைக்குகளை போலீஸாரே லத்தியால் வெறித்தனமாக தாக்கி உடைக்கும் காட்சியைப் போட்டுள்ள தமிழகத்தின் ஜாலியாவாலாபாக் என்று ஹேஷ்டேக் போட்டு இவர் போட்டுள்ள கருத்து இது.
மக்களைத் தாக்கும் போலீஸ்
Police destroying public property to make it look like students did it. video-4 Shocking truth of #TNJallianwallahbagh pic.twitter.com/8MvOnZu42G
— Vijay's future GF❤ (@DianaHartsVJ) January 23, 2017
இந்த வீடியோவில் மக்கள் சொத்துக்களை சூறையாடி அவர்களை போலீஸார் தாக்கும் காட்சி உள்ளது. கொடூரமாக இருக்கிறது இந்த தாக்குதல்.
சீருடையில் உள்ள போலீஸார் நடந்து கொண்ட விதம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆட்டோவை கொளுத்தும் வீடியோவை மார்பிங் என்று டிஜிபி கூறுகிறார். ஆனால் பெண்களை தடியால் அடிப்பது, குடத்தைப் பிடுங்கி கீழே போட்டு வெறித்தனமாக உடைப்பது, தேடித் தேடி பெண்களை அடிப்பது கூடவா மார்பிங் என்று மக்கள் கேட்கிறார்கள். குடத்தைப் பிடுங்கி வெறித்தனமாக தாக்கும் அளவுக்கு போலீஸாருக்கு ஏன் அவ்வளவு கோபம் என்றும் மக்கள் ஆவேசமாக கேட்கிறார்கள்.
பெண்களை அடித்து நொறுக்கத்தான் போலீஸாருக்கு தடி கொடுத்தார்களா என்றும் பெண்கள் கோபாவேசம் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஏன். எது அவர்களை இந்த அளவுக்கு குறி வைத்துத் தாக்கும் அளவுக்குக் கொண்டு போனது, போலீஸ் என்றாலே இப்படித்தான் என்பதை நிரூபித்து விட்டார்களே என்றும் மக்கள் வேதனை வெளியிட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications