விஜயகாந்த் உருவ பொம்மையை எரிக்கும்போது வேட்டியில் தீ.. ஸ்டிக்கர் பாய்சுக்கு டிரையினிங் பத்தலயாம்
சென்னை: விஜயகாந்த் துப்பினாலும் துப்பினார், ஆதரவு, எதிர்ப்பு, கேலி, கிண்டல் என சமூக வலைத்தளமே தடதடத்து கிடக்கிறது.
ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதற்காக, அதிமுகவினர் விழுப்புரத்தில், அவரது உருவ பொம்மையை எரிக்கப்போய், அது அவர்கள் மீதே பரவிய சம்பவமும் கலகலப்புக்கு காரணமாகியுள்ளது.
டிவிட்டரில், இந்த த்தூ.. விவகாரம் பற்றி சிலர் என்ன கூறியுள்ளார்கள் என்பதை பற்றிய ஒரு பார்வை இதோ:
|
பின்தங்கிய பீப்சாங்
தற்போது, விஜயகாந்த் முன்னணியில் இருப்பதாகவும், பீப் சாங்கால் சர்ச்சைக்குள்ளான சிம்பு, பின்தங்கிவிட்டதாகவும், மக்களின் சர்ச்சை மோகத்தை கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
வேட்டியில் தீ
விஜய்காந்த் உருவ பொம்மையை எரித்தபோது ஸ்டிக்கர் பாய்ஸ் (அதிமுகவினர்) வேட்டியில் பரவிய தீயினால் தெறித்து ஓடினர்...:) ட்ரெய்னிங் பத்தல பாய்ஸ்க்கு...அவ்வ்வ் என கூறுகிறது இந்த டிவிட்.
|
டால்பினும் துப்புதே, அடடே
டால்பின் ஒன்று, தண்ணீரை உமிழ்ந்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய காட்சியை போட்டோவாக போட்டு, இப்படி அந்த டால்பின் அபாரமாக துப்ப காரணம், விஜயகாந்த் பேட்டியை பார்த்ததுதான் என்று பகடி செய்கிறது இந்த டிவிட்.
|
உளறாத வார்த்தை
விஜயகாந்த் இதுநாள் வரையில் தெளிவாக, உளறாமல் பேசிய ஒரே வார்த்தை த்தூ மட்டுமே என்கிறது இந்த டிவிட். வஞ்சப்புகழ்ச்சி டிவிட் போலும்.
|
எரித்தால் வேட்டி போயிடுது
விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். வேட்டி பத்திரம் தொண்டர்களே என்று கூறுகிறது இந்த டிவிட். வேட்டியில் தீ பரவிவிடுகிறது என்பதற்காக இந்த வார்னிங்கோ?
|
பதில் சொல்ல தெரியலை
முதல்வரை பற்றி கேட்டா அவங்ககிட்ட போய் கேளு என்பதும், கூட்டணி பத்தி கேட்டால் சொன்னவங்ககிட்ட போய் கேளு என்பதும் பதிலா?? என்று விஜயகாந்த்திற்கு கேள்வி எழுப்புகிறது இந்த டிவிட்.
|
துப்பியே அணைப்பாருய்யா கேப்டன்
விஜயகாந்த் உருவ பொம்மையை எரிக்கும்போது வேஷ்டியில் தீ பற்றியது என்று செய்தி வெளியாகியுள்ளது. தீயை விஜயகாந்த் துப்பி, துப்பியே அணைத்துவிடுவார் என்பதால், கேப்டென் அதை அணைக்க ஒரு தூ கொடுங்க என்று கேட்கிறது இந்த டிவிட்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications