நக்மா இல்லைன்னா குஷ்பு.... இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இளங்கோவன், சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறினார். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+