Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜியை பார்த்து வருங்கால முதல்வரேன்னு யாரோ கூட்டத்தில கூவிட்டாங்களோ?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம்டா... என்று விஜய் சொன்ன வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையே செந்தில் பாலாஜிக்கு பொருந்தியிருக்கிறது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைன்னு பேசிக்கிட்டாலும், மண்டையில பல்பு மாட்டின நேரம், பியூஸ் போயுருச்சு என்று கதற கதற அடிக்கிறார்கள் வலைஞர்கள்.

அதிர்ஷ்ட காற்றின் வேகம், ஓகோவென இருக்க, 2007 மார்ச், 11ல், கரூர் மாவட்ட ஜெ., பேரவை செயலரானார். அடுத்த பத்தாவது நாளில், கட்சியின் மாவட்ட செயலாளரானார்.

அரசியல் பரமபத விளையாட்டில் 2006ல் எம்.எல்.ஏ, 2011ல் அமைச்சர் என ஏணியில் ஏற ஆரம்பித்தவருக்கு திடீரென பாம்பு தீண்ட சரசரவென சறுக்கல் ஆரம்பித்து விட்டது. இவரது பதவி பறிப்பை வைத்து என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்த்தால், செம என்ஜாய்மென்ட்... நீங்களும் படிங்க ரசிங்க மக்களே!

சட்டி சுட்டுருச்சோ

தீச்சட்டி எடுத்த செந்தில் பாலாஜியை தீச்சட்டி கோவிந்தன் ரேஞ்சுக்கு புகழ் பாடுகின்றனர் வலைஞர்கள். இதோ ஒருவர் பதவி போன உடன்,

செந்தில் பாலாஜி "(தீச்)சட்டி சுட்டதடா, கை விட்டதடா" னு பாடிட்டிருக்காராம்ல! என்று கேட்கிறார்.

என்னம்மா வித்தியாசம்

செந்தில் பாலாஜி மைன்ட்வாய்ஸ் : - அப்போ சின்சியாரிட்டிக்கும் சீனியாரிட்டிக்கும் என்னம்மா வித்தியாசம் ?!

வருங்கால முதல்வர்

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் ..# எவனோ கூட்டத்துக்குள்ள இருந்து வருங்கால முதல்வர் வாழ்கன்னுருப்பான் போல..

பவர் போயிருச்சேப்பா

மண்டைல பல்பு மாட்டினப்போவே நெனச்சேன்.. இவர் பவர கட் பண்ணிடுவாங்கனு...

அரசியல்ல சகஜம்பா

சர்வர் ல பிரச்சினை னா ரீஸ்டார்ட் பண்றதும் அதிமுக ல பிரச்சினை னா அமைச்சர்கள மாத்தறதும் சகஜம் தானே.

நெருப்பே இல்லாம அக்னி சட்டி தூக்கனல அதான் தண்டனை கிடச்சிடுச்சி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+