சூரிய புயல்... சில நிமிடங்கள் செயலிழந்த செயற்கைக் கோள்... தடங்கலுக்கு வருந்திய டிவி
சென்னை: கடந்த 3 தினங்களாகவே பிற்பகல் 12.30 மணியளவில் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடங்கலுக்கு டிடிஹெச் நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.
மழையோ, தூறலோ விழுந்தால்தான் டிவி சிக்னல் கிடைக்காமல் போகும். இது என்ன வெயில் கொளுத்தும் போதும் டிவி ஒளிபரப்பு கட் ஆகிறதே என்று யோசித்தால் இது சூரியப்புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

பொதுவாக செயற்கைகோள்கள், பூமியிலிருந்து 22,300 மைல் தொலைவில் பூமத்திய ரேகைக்கு நிலைநிறுத்தப்படுகின்றன. பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சூரியன் - செயற்கைகோள்கள் - பூமியில் உள்ள செயற்கைகோள் தகவல்களை பெறும் நிலையங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. இதனால் செயற்கைகோள்கள் செயலிழக்கின்றன.
செயற்கை கோள்கள் செயழிக்க காரணம், பூமியில் உள்ள தகவல்களை பெறும் நிலையங்களால், சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தி மற்றும் தொலைதொடர்பு சிக்னல்களை வேறுபடுத்த முடியாததே.
சூரிய புயல் நேரமானது, பூமியில் உள்ள ஆண்டனா அமைந்திருக்கும் இடம், பூமத்திய ரேகைக்கு மேல் உள்ள செயற்கைகோளின் சுற்றுப்பாதை அமைவிடம், பூமியில் உள்ள ஆண்டனாவின் அளவு மற்றும் பெறும் அலைவரிசையின் அளவை பொறுத்து அமைகிறது. இந்த செயற்கைகோள் செயலிழப்பானது, சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
சூரியன், செயற்கைகோள் மற்றும் பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்கள் சற்றே ஒரே திசையில் இருக்கும் போது, செயற்கைகோள் செயலிழப்பு சிறிது நேரம் நீடிக்கிறது. சூரியனானது, செயற்கைகோளுடனும், பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்களுடன் நெருங்க நெருங்க செயற்கைசெயலிழப்பு நேரம் அதிகமாகிறது.
சூரியன் செயற்கைகோள் மற்றும் பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்கள் துல்லியமாக ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, செயற்கைகோள் செயலிழப்பு நேரம் அதிகமாக உள்ளது. சூரியன் நகர துவங்கியதும், இந்த நேரம் சற்று குறைய துவங்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 3 தினங்களாகவே தொலைக்காட்சி ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தடங்கலுக்கு வருத்தம் தெரிவிக்குமே தெரியலையே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications