வீடு விட்டு தாவி 50 பெண்களை பலாத்காரம் செய்த "குரங்கு" மனிதன்.. பகீர் தகவல்கள்!
சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த நபர் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
Recommended Video

சென்னை: சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த குரங்கு மனிதனிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்த அறிவழகன். இவர் கிண்டி மடுவின்கரை பகுதியில் தங்கியிருந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்துள்ளதார். இதேபோல் 50 பெண்களைய பலாத்காரம் செய்துள்ளார்.

தண்ணீர் கேட்பது
வீட்டுக்கு தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறப்பதற்காக அவர்கள் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்பார். அந்த பெண் உள்ளே சென்று தண்ணீர் எடுப்பதற்குள் வீட்டுக்கு நுழைந்து கதவை தாழிட்டு கொண்டு பெண்களை பலாத்காரம் செய்தார்.

பெண் புகார்
வீட்டுக்குள் வெளியே இருக்கும் குழாயை திறந்து விடுவதன் மூலம் பெண்களை வரவழைத்து நைசாக வீட்டினுள் நுழைந்தும் பலாத்கார செயல்களில் ஈடுபட்டுள்ளார். வேளச்சேரியில் உள்ள ஒரு பெண் அங்குள்ள போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த இளைஞரை 18-ஆம் தேதி கைது செய்தனர்.

திடுக் தகவல்
புழல் சிறையில் உள்ள மதன் அறிவழகனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மாடி விட்டு மாடி தாவி சென்றும் தனியாக வீட்டினுள் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும், அவர்களை பலாத்காரம் செய்யும் போது வீடியோ எடுத்து கொண்டு மீண்டும் தன்னுடைய இச்சைக்கு அவர்களை இணங்க வைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

விழிப்புணர்வு
சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை, கத்திமுனையில் மர்மநபர் ஒருவர் பாலியல் பலாத்காரம், நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், கிண்டி மடுவின்கரை பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞனே, இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 2 மாதங்களுக்கு முன்பே, அறிவழிகனின் செயல்கள் குறித்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதி மக்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications