Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓரினச் சேர்க்கை... எல்டன் ஜான், ரிக்கி மார்ட்டின், லத்தீபா, சீனி மகன் அஸ்வின்... !

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆதரவாக, எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது.

இது ஓரினச் சேர்க்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தீர்ப்பு தங்களுக்கு வருத்தம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு இருக்கட்டும்.. உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ள சில பிரபலங்களைப் பார்ப்போம் வாருங்கள்...

ரிக்கி மார்ட்டின்

ரிக்கி மார்ட்டின்

ரிக்கி மார்ட்டின் உலகப் புகழ் பெற்ற பாடகர். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ரிக்கி மார்ட்டின் எப்படி அவரது பாடலுக்கும், ஹேர் ஸ்டைலுக்கும் பிரபலமோ, அதே போல அவரது கே பழக்கமும் கூட பிரபலமானதுதான்.

எல்ட்டன் ஜான்

எல்ட்டன் ஜான்

இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் எல்ட்டன் ஜான் ஒரு கே.. இளவரசி டயானாவுக்காக இவர் அமைத்த இரங்கல் பாடல் பிரபலமானது.

நடிகை சிந்தியா நிக்ஸன்

நடிகை சிந்தியா நிக்ஸன்

தன்னை ஒரு பைசெக்ஸுவல் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நடிகை. ஆணுடன் உறவு கொள்ளும்போது எப்படி உணர்கிறேனோ அதேபோலத்தான் பெண்ணுடனான தொடர்பிலும் உணர்வதாக கூறியவர் சிந்தியா.

டிரேசி சாப்மேன்

டிரேசி சாப்மேன்

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி டிரேசி சாப்மேன். இவரும் ஒரு கே... நான்கு முறை கிராமி விருது பெற்றவரும் கூட.

போர்சியா டி ரோஸ்ஸி

போர்சியா டி ரோஸ்ஸி

ஆஸ்திரேலிய அமெரிக்க நடிகை போர்சியா டி ரோஸ்ஸி. ஆரம்பத்தில் வழக்கமான திருமண வாழ்க்கையைத்தான் இவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் பின்னர் பிரான்செஸ்கா என்ற பாடகி மீது மோகம் கொண்டு அவருடன் நட்பாக இருந்தார். மாடல் அழகியாக, நடிகையாக வலம் வருபவர் போர்சியா. தற்போது இவர் நெருக்கமாக இருப்பது டிவி நடிகையான எல்லன் டி ஜெனரஸுடன்.

டிலா நெகுயன்

டிலா நெகுயன்

சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். மாடல் அழகி, டிவி நடிகையும் கூட. கவர்ச்சிகரமானவர். கூடவே களேபரமான சர்ச்சைகளிலும் சிக்கியவர். பெரும்பாலும் இவர் ஆண்களுக்கான பத்திரிகைகளின் அட்டைப் படமாக வலம் வருபவர். ஸ்டிரிப்டீஸ் டான்ஸுக்குப் பெயர் போனவர். கேஸி ஜான்சன் என்ற அழகியுடன் நெருக்கமாக இருந்தவர். மன அழுத்தத்தால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று அதிலிருந்தும் மீண்டவர்.

மிஷல் ரோட்ரிக்ஸ்

மிஷல் ரோட்ரிக்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை, திரைக்கதையாசிரியர், டிஸ்க் ஜாக்கி.. அதிரடியான ஆக்ஷன் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படத்திலும் நடித்தவர். அதன் 3 பாகங்களில் நடித்த பெருமைக்குரியவரும் கூட. அதேபோல லெஸ்பியன் உறவுக்கும் பெயர் போனவர் மிஷல். இவருக்கு காதலர்களும் நிறைய , காதலிகளும் நிறைய.

மெலிஸ்ஸா லூ ஈத்தரிட்ஜ்

மெலிஸ்ஸா லூ ஈத்தரிட்ஜ்

தான் ஒரு லெஸ்பியன் என்பதை பகிரங்கமாக அறிவித்தவர் அமெரிக்க ராக் பாடகியான மெலிஸ்ஸா லூ ஈத்தரிட்ஜ். 1993ம் ஆண்டு பில் கிளிண்டன் பதவியேற்பின்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நிகழ்ச்சியும் நடத்தியவர்.

நடிகை குயீன் லத்தீபா

நடிகை குயீன் லத்தீபா

43 வயதாகும் லத்தீபா அமெரிக்க பாடகி, ரேப்பர், மாடல் அழகி, டாக் ஷோவை நடத்துபவர்.. என பன்முகம் கொண்டவர். இவரது இன்னொரு முகம், இவர் ஒரு லெஸ்பியன் என்பது. திரைப்படம், டிவி, இசை என பல துறைகளில் பரிமளித்தவர் இவர். இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பரபரப்பானது. கஞ்சா வைத்திருந்ததாக, கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக பலமுறை கைது செய்யப்பட்டவர். குடிபோதையில் கார் ஓட்டியதாக கைதாகியுள்ளார். தனது பெரிய மார்பகத்தை சிறிதாக்க அறுவைச் சிகிச்சை செய்தும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார். இவரும் ஒரு லெஸ்பியன்.

சீனி மகன்

சீனி மகன்

நம்ம ஊரிலும் நிறைய கே பிரபலங்கள் உள்ளனர். பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மகன் அஸ்வின் கூட ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான். அவரும் அவரது நெருங்கிய நண்பரான அவி முகர்ஜியும் நெருக்கமானவர்கள். இவர்களது விவகாரம் கூட சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் வெடித்தது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+