அது என் கழுத்துக்கு வைத்த குறி... கத்தி வெட்டு குறித்து ரோஜா!
நகரி: தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும், கோவில் திருவிழாவில் தனது கழுத்துக்குக் குறி வைக்கப்பட்ட கத்தி, தவறுதலாக கையில் பட்டதால் தான் உயிர் தப்பியதாக பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் நகரித் தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரியில் நடந்த ஜாத்திரை திருவிழாவில் பங்கேற்ற அத்தொகுதி எம்.எல்.ஏ -வான நடிகை ரோஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோவிலில் முதல் மரியாதை தருவது தொடர்பான பிரச்சினையில் ரோஜாவில் கையில் கத்தி வெட்டுப் பட்டது. இதில் ரோஜாவின் வலது கையில் 3.செ.மீ நீளத்துக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
மேலும், தாக்குதலின் போது தெலுக்குதேசம் கட்சியைச் சேர்ந்த பாபுரெட்டி என்பவர் தன்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளியதாக குற்றம் சாட்டினார் ரோஜா. இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி நகரி போலீஸ் நிலையம் முன்பும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுடன் நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், தன் மீதான தாக்குதல் குறித்து நடிகை ரோஜா கூறியதாவது:-

மாபியாவின் பிடியில்...
சந்திரபாபுநாயுடு குண்டர்களை ஏவி எதிர்க்கட்சியினரை மிரட்ட பார்க்கிறார். மாபியாவின் பிடியில் அவர் சிக்கி உள்ளார்.

நடவடிக்கை இல்லை...
அவரது கட்சியை சேர்ந்த பாபுரெட்டி என் கழுத்தை நெறித்து தள்ளினார். அதுபற்றி புகார் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு எனது கையில் கத்தியால் வெட்டி உள்ளனர்.

கொல்ல சதி...
அந்த கத்தி எனது கழுத்தை குறிவைத்து வந்தது. நான் தடுத்ததால் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க என்னை கொல்ல நடந்த சதிதான்.

மன்னிப்பு கேட்க வேண்டும்...
இதற்கான சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இதற்கு அவர் துணை போய் உள்ளார் என்று அர்த்தமாகி விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தலைவி...
இதற்கிடையே, ரோஜா தாக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் அவரது கணவர் இயக்குநர் செல்வமணி. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது :-‘‘எங்கள் குடும்பத்தில் தலைவியாக ரோஜா உள்ளார். அவருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் பயந்து போய் விட்டோம். ரோஜா தைரியமாக செயல்படுபவர்.

உயிருக்கு ஆபத்து...
ஆனாலும், அவரது உயிருக்கு உலை வைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. ரோஜா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சந்திரபாபுநாயுடு தான் பொறுப்பு'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications