உன்னுடன் என் மகள் குடும்பம் நடத்த மாட்டாள்.. நிராகரித்த மாமியார்... வெட்டித் தள்ளிய மருமகன்!
மனைவியை குடும்பம் நடத்த மாமியார் அனுமதிக்காததால் அவரை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தினார் மருமகன்.
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மாமியார் மறுத்ததால் கோபமடைந்த மருமகன் அரிவாளை எடுத்து மாமியாரை சரமாரியாக வெட்டி விட்டார். இதில் மாமியார் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பென்னாகரம் அருகே உள்ள தேக்கன்கொள்ளை கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது குமார். இளநீர் வியாபாரியான இவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு சரஸ்வதி தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

அங்கு வந்த குமார் மனைவியை தன்னுடன் அனுப்பக் கோரி மாமியார் கவுரம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் உன்னுடன் எனது மகளை இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று மாமியார் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த குமார் அரிவாளை எடுத்து கவுரம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்தார் கவுரம்மாள்.
அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications