2016 தேர்தலின் கதாநாயகன் கருணாநிதி- தமாகாவில் இருந்து "தப்பிய" பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் ஒரே மேடையில் கருணாநிதி, சோனியா, ராகுல், ஸ்டாலின் பிரசாரம் செய்வர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முனிரத்தினம் மாநில செயலாளர் சுகுமார் தலைமையில் ஏராளமான தமாகாவினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
த.மா.கா.வில் இருந்து வாசனை தவிர எல்லோரும் காங் கிரசுக்கு வரவேண்டும். வாசன் மீது மூப்பனார் மகன் என்ற ரீதியில் எனக்கு பாசம் உண்டு. ஆனால் எப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அப்போதே துடித்துப் போனேன். பாவிகளுடன் பேசியவர்களோடு இருக்கலாமா? எல்லோரும் வாருங்கள்.
தேர்தல் முடிவில் இருந்து காங்கிரசுக்கு புதிய அத்தியாயம் தொடங்கும். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஜெயலலிதாவுக்காக காத்து இருக்கிறார். அவரை விட்டு விட்டோம். பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், கார்வேந்தன் உள்பட பலர் வர இருக்கிறார்கள்.
தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிக பிரமாண்டமானது. கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது. மது விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கை பா.ம.க.வை பார்த்து காப்பி அடித்தாக சொல்கிறார்கள். ஜெராக்ஸ் காபி எடுப்பதில் பா.ம.க.வுக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஒபாமா போலவே போஸ்டர் போட்டவர்கள் அவர்கள். எனவே எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவும் மது விலக்கை படிப்படியாக கொண்டு வருவேன் என்கிறார். ஒரு படி கூட ஏற முடியாதவரால் எப்படி படிப்படியாக அமல்படுத்த முடியும்.
ஆட்சியில் இருந்தபோது செய்ய மறுத்தையும், மறந்ததையும், இனிவர மாட்டோம் என்று தெரிந்து விட்டதால் மோடியைப் போல் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுப் பார்க் கிறார்.
சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருவார்கள். ஒரே மேடையில் கருணாநிதி, சோனியா, ராகுல், ஸ்டாலின், முஸ்லிம் லீக் தலைவர்கள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகிய அனைவரும் ஒரே மேடையில் பேசுவார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications