தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால் உள்ளிட்டோர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார் .

அண்மையில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியினர் இன்று திமுக தலைவரை சந்தித்து பேசினா்.

South Indian actor Administrators meet to karunanidhi

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், சினிமாவின் மூத்த கலைஞர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தோம். நடிகர் சங்க பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக எங்களிடம் அவர் தெரிவித்தார். நடிகர் சங்கப்பணிகளை ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்.

மேலும், பழைய திரைப்பட நினைவுவுகள், நகைச்சுவை, இலக்கியம் தொடர்பான பல அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றியும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார் என நாசர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+