தென்னிந்திய நடிகர் சங்கத்தை ‘இந்திய நடிகர் சங்கமாக’ மாற்ற வேண்டும்.. இது கமல் கோரிக்கை!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் எதிரெதிராக மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்களித்தபின் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
அதன்படி, நடிகர் கமல், நடிகை கவுதமியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர், "பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம். தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பின் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்" என்றார்.
முன்னதாக காலையில் தனது வாக்கினைப் பதிவு செய்த ரஜினி,'தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கமல்ஹாசனோ இந்திய நடிகர் சங்கம் என்று கூறியிருப்பது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications