வங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி!: குமரி, தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்யும்!!
சென்னை: குமரிக்கடலை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தை கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் புரட்டிப் போட்டு வந்தது கன மழை. இதன் காரணமாக சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. கடலூர் சின்னாபின்னமாகிப் போனது. இந்த நிலையில் வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்தது.
தற்போது சென்னையிலும், கடலூரிலும் மழை சற்றே ஓய்ந்துள்ளது. அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு பெய்யக் கூடிய பருவ மழை, இன்னும், 20 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் மழையின் வேகம் குறைகிறது என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனினும் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
புதிய மேலடுக்கு சுழற்சி
குமரிக்கடலை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 9 செ.மீட்டரும், திருச்செந்தூரில் 7 செ.மீட்டரும், நாகை, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தலா 5 செ.மீட்டர் மழையும பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications