இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை 36% தான் – வரும் வாரத்தில் அதிகரிக்கும்!
சென்னை: இந்தியாவில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் அளவு 36 சதவீதம்தான் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகத் தொடங்கிய பருவமழை, இந்தாண்டில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை.
பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்குப் பின்னர் இப்போதுதான் சற்று தீவிரமடைந்துள்ளது.

36 சதவீத மழை மட்டுமே:
இந்த நிலையில், நாடு முழுவதும் பதிவான அளவின்படி இதுவரை 36 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

சராசரியை விடக் குறைவு:
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் இந்த ஆண்டு காலத்தில் சராசரி மழையை விட 36 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

குறைவான மழை அளவு:
தென் தீபகற்பத்தில் 26 சதவீதமும், வடமேற்கு இந்தியாவில் 49 சதவீதமும், மத்திய இந்தியாவில் 47 சதவீதமும், கிழக்கு, வடகிழக்கு இந்தியாவில் 22 சதவீதமும் குறைவான மழை பதிவாகி உள்ளது.

பருவ மழை வலுப்பெறும்:
கடந்த மாதத்தை விட இந்த மாதம் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும் வாரங்களில் பருவமழை மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications