சென்னையிலிருந்து கோவை, நெல்லை, நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சென்னையில் இருந்து நாகர்கோயில், கோவை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway to operate express trains

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாகர்கோயில் - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06052):

ஜூன் 14,21,28 ஆகிய தேதிகளில் நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6,05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06053: ஜூன் 15,22,29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சென்னை சென்ட்ரல் - கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் (06054):

ஜூன் 12,19,26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடையும்.

ரயில் எண் 06055: ஜூன் 14,21,28 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், வடகோவை ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06056):

ஜூன் 18,25 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06057: ஜூன் 19,26 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கு நேற்றுமுதல் முன்பதிவு தொடங்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+