தீபாவளி பண்டிகை எதிரொலி.. சென்னையிலிருந்து, நெல்லை, எர்ணாகுளத்திற்கு சிறப்பு கட்டண ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து நெல்லை, எர்ணாக்குளத்திற்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களை தீபாவளியை முன்னிட்டு இயக்குகிறது தெற்கு ரயில்வே.

சென்னை எழும்பூர் - நெல்லைக்கு இரவு 9.05-க்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (சுவிதா) இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.

 Southern railway operating special trains between Chennai and Nellai

அக்டோபர் 16ம் தேதி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இரவு 9.05க்கு கிளம்புகிறது இந்த ரயில்.

அக்டோபர் 19ல் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 9.30க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அக்டோபர் 20 மற்றும் 27 ல் எழும்பூர் - நெல்லை இடையே இரவு 9க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அக்டோபர் 22ல் நெல்லை - எழும்பூர் இடையே பிற்பகல் 2.45க்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

 Southern railway operating special trains between Chennai and Nellai

இதேபோல எர்ணாகுளம் - சென்ட்ரல் இடையே இரவு 7 மணிக்கு சுவிதா ரயில் இயக்கப்படுகிறது. இது காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை மார்ககத்தில் செல்லக்கூடியது.

அக்டோபர் 20, 27, நவம்பர் 3,10 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் மற்றும் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்கத்தில் அக்டோபர் .22ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+