கோடை விடுமுறை: சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்
சென்னை: கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00601: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00602: ஏப்ரல் 17-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00605: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 00604: ஏப்ரல் 17ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
லக்கேஜ் லிமிட் வந்தாச்சு.. தெற்கு ரயில்வே திடீர் கண்டிஷன்! பயணிகள் தெரியாமல் இதை செஞ்சா ஸ்பாட் ஃபைன் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications