தமிழகம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த பொதுத் துறை வங்கி ஊழியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் கடந்த மாதம் 12ம் தேதி தேசிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து மாநில வாரியாக வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் முடிவு செய்தனர். அதன்படி தமிழகம், கேரளா, புதுவை, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா ஆகிய 6 மாநில வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதையடுத்து டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநில வங்கி ஊழியர்கள் வரும் 3ம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநில வங்கி ஊழியர்கள் 4ம் தேதியும், குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநில ஊழியர்கள் 5ம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள், இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிவிட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்.












Click it and Unblock the Notifications