எனக்கு வருத்தம்ப்பா.. ஏன் இப்படி செஞ்சீங்கனு ஒரு வார்த்தை கேட்டாரா? எடப்பாடி செயலால் சபாநாயகர் கோபம்
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், "அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு சற்று கோபமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து போகாமல் கவனித்ததைச் சுட்டிக்காட்டி, அதிமுகவினரை விமர்சித்தார் சபாநாயகர் அப்பாவு.

சட்டசபை விவாதம் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் ஐபிஎஸ், கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசத் தொடங்கினார். முதல்வர் பதிலுரையின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுகவினருக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக வெளிநடப்பு : இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற உரையை நேரலை செய்யாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கு சபாநாயகர் அப்பாவு வருத்தம் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதலமைச்சர் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் கோபம் : இப்படி ஏன் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட செல்லாமல் இருக்கக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர். அவையை விட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications