இலங்கை மன்னிப்பு கேட்டு விட்டதால் சட்டசபையில் விவாதம் தேவையில்லை - சபாநாயகர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்த அவதூறான கட்டுரை மற்றும் படத்துக்காக இலங்கை அரசு மன்னிப்பு கேட்டு விட்டதால் அதுகுறித்து சட்டசபையில்விவாதிக்க வேண்டியது இல்லை என்று தமிழக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சர்ச்சை வெடித்த அன்றே சட்டசபையில் விவாதம் நடத்த மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை கோரின. ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இன்றும் கூட பல கட்சிகள் இதற்குக் கோரிக்கை விடுத்தன.
ஆனால் இன்றும் சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதுகுறித்து அவர் உறுப்பினர்களிடையே விளக்குகையில், இலங்கை அரசின் அவதூறு செய்திக்கு முதல்வரின் பின் நின்று அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பணிந்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. எனவே அந்த பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் தேவை இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி
அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அதிமுக உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டு அவைகளை ஸ்தம்பிக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications