காங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்
காங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : அவையில் நேற்று விஜயதாரணி விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்காத காரணத்தாலேயே நான் அவரை வெளியேற்ற வேண்டியது வந்தது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்றைய விவாதத்தின் போது, விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ விஜயதாரணி குமரி மாவட்ட பிரச்னையை எழுப்பினார். சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவைக் காவலர்கள் அவரை வெளியேற்றினர். அப்போது, சபாநாயகர் தவறாகப் பேசியதாகவும், அவைக்காவலர்கள் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் விஜயதாரணி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சபாநாயகர் இன்றைய விவாதத்தில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சபை விதிகளை மதிக்காமல் அளவுக்கு அதிகமாகப் பேசினார்.
நான் இதுவரை எந்தப் பெண் உறுப்பினர்களையும் வெளியேற்றியதில்லை. ஆனால், அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லாததால், வெளியேற்ற உத்தரவிட்டேன். அவரது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் அவர் அதுபோன்று நடந்துகொண்டதாலேயே நான் நடவடிக்கை மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications