கேஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் தேவையில்லை: 14ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை: தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சிறப்பு முகாமும் வருகின்ற 14 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
சமையல் கேஸ் மானியத்திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் கேஸ் உள்ளவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்படும்.
வினியோகஸ்தர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழுத்தொகை கொடுத்து சிலிண்டர்களை பெற வேண்டும்.

மானிய திட்டத்தில் பலன் பெற நுகர்வோர் தங்களது ஆதார் அட்டை எண்ணை கியாஸ் வினியோகஸ்தரிடமும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியிலும், விண்ணப்பப்படிவம் 1, 2 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3, 4 ஐ பூர்த்தி செய்து வினியோகிஸ்தர், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதற்காக சமையல் எரிவாயு தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சமையல் கேஸ் நேரடி மானிய திட்டத்தில் சேர நுகர்வோருக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் மானியத்திட்டத்தில் சேர முடியுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது.
இதனை போக்கவும் படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் வருகிற 14 ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகம் அரும்பாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 14-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
அரும்பாக்கம், திருவள்ளூரில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
மானியத்திட்டத்தில் சேர வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications