வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க இறுதி வாய்ப்பு: வாக்காளர் முகாம்களில் குவிந்த மக்கள் !
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் இன்னும் ஓரிரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.
தமிழகத்தில் உள்ள 65616 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியலில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று வாக்குச் சாவடிகளில் பொது மக்கள் குவிந்தனர். சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் காணப்பட்டது.பொது மக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று சரி பார்த்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் கடந்த 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.
ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-யினை பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்து கொடுத்தனர். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணபிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications