வெற்றி உங்கள் கையில்: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
நெல்லை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் மார்ச் தொடங்க இருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் மும்முரமாக தயார் ஆகி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளிக் கல்வி துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வெவ்வேறு பகுதிகளில் பணிபுரியும் அனுபவம் மிக்க சிறப்பு நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சியும், வழிகாட்டுதலும் அளிக்க வேண்டும்.
முந்தைய ஆண்டுகளில் நடந்த பொது தேர்வு வினாத்தாள்களை கொண்டு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை பயிற்சி அளித்தல், மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.
பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் வெற்றி உங்கள் கையில் என்ற புதிய திட்டத்தை ஒவ்வொரு பள்ளியிலும் திறம்பட செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications