'அம்மா'வுக்காக செங்கோட்டை ஆலயங்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
தென்காசி: முதல்வர் ஜெயலலிதா குணமடைய அதிமுகவினர் செங்கோட்டை பகுதி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மக்கள் பணியை மீண்டும் தொடர வேண்டி நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆலயங்களில் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பிரார்த்தனைகள், பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் புளியரை, பகவதிபுரம், கட்டளைக்குடியிருப்பு, தெற்குமேடு, அங்கன் காலடி, கற்குடி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றிய செயலாளர் செல்லப்பன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிசேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முதல்வர் குணமடைய வேண்டினர். இதே போன்று செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.

முன்னதாக தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications