கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொச்சுவேலியில் இருந்து வருகிற 25 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் காலை 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் 3 -வது நாள் காலை 5.15 மணிக்கு இந்தூரை சென்றடையும்.

மங்களூரில் இருந்து வருகிற 25 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும்.
மங்களூரில் இருந்து வருகிற 24, 31-ந் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் இரவு 7.25 மணிக்கு மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications