கந்த சஷ்டி விழா - திருச்செந்தூருக்கு அக் 29ல் சிறப்பு ரயில்
நெல்லை: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவுக்கு வரும் அக்டோபர் 29ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது. சூரசம்ஹார விழா அக்டோபர் 29ம் தேதி் நடக்கிறது. இதை முன்னிட்டு கந்த சஷ்டி விழாவுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 29ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாரயணன் கூறியதாவது, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இயக்கப்படும், சிறப்பு ரயில் 29ம்தேதி காலை 9.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடையும்.

மறு மார்க்கத்தில் நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் நெலலையில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும். திருச்செந்தூர்-நெல்லையிடையே மற்றொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.50க்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கத்தில் நெல்லை-திருச்செந்தூர் இடையே நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 10.45க்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.15 மணிக்கு திருச்செந்தூரை அடையும்.
இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ரயில் நிலையங்களில் நி்ன்று செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications