தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் (பெரும்பாலும் பள்ளிகள்) ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.
இந்த மையங்களில் விண்ணப் பங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார்கள்.
சிறப்பு முகாமில் ஏதேனும் சிரமம் இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் (சென்னையில் மட்டும் மாநகராட்சி ஆணையர் அலுவலகம்) செயல்படும் உதவி மையங்களை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பட்டியலுக்கு இதுவரை 44,513 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 24,182 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும், 20,331 விண்ணப்பங்கள் நேரடியாகவும் பெறப்பட்டன.
இவ்வாறு பிரவீண்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications