நிஜமாகவே ரூ.2000 நோட்டில் எழுத்துப் பிழை?: உண்மை என்ன?
சென்னை: புதிய 2000 ரூபாய் நோட்டில் இந்தி மொழியில் எழுத்துப் பிழை எதுவும் இல்லையாம்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து வைத்தார். புதிய நோட்டை பார்த்த மக்கள் அதில் இந்தி மொழியில் 2000 ரூபாய் என்பது தவறாக எழுதப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தனர்.
ஒரு சிலர் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் அளித்தனர்.

உண்மை
ரூபாய் நோட்டின் எழுத்துப் பிழை பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது. அது எழுத்துப் பிழை இல்லையாம். ரூபாய் நோட்டின் பின்புறம் 2000 ரூபாய் என்பது தமிழ் உள்பட 15 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

இந்தி
இந்தி மொழி நோட்டு முழுவதும் இருப்பதால் அது அந்த 15 மொழி பட்டியலில் இல்லை. இது தெரியாமல் கொங்கனி மொழியில் எழுதப்பட்டதை மக்கள் இந்தி என தவறாக புரிந்து கொண்டு எழுத்துப் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொங்கனி
கொங்கனி மொழிக்கு என்று பிரத்யேக எழுத்துவடிவம் இல்லை. அவர்கள் கொங்கனியை தேவனகிரி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் எழுதுவார்கள். கோவாவில் உள்ளவர்கள் தேவனகிரியிலும், கர்நாடக எல்லையையொட்டி வசிப்பவர்கள் கன்னட எழுத்து வடிவத்திலும் கொங்கனியை எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டு
2000 ரூபாய் நோட்டில் உள்ள கொங்கனி மற்றும் மராத்தி எழுத்துக்கள்,
दोन हजार रुपया - கொங்கனி
दोन हजार रुपये - மராத்தி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications