எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துக்கு சென்னையில் மேலும் 9 தியேட்டர்கள் நடத்த அனுமதி
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்பிஐ சினிமா நிறுவனத்துக்கு சென்னையில் புதிதாக 9 தியேட்டர்கள் நடத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கியுள்ளார்.
சென்னையில் புதிய தியேட்டர்கள் நடத்த அனுமதி கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிவிஆர், எஸ்பிஐ உள்ளிட்ட சினிமா நிறுவனங்கள் போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு 2 ஆண்டுகளாகியும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, பிவிஆர் சினிமா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ நகரங்களில் ஏற்கனவே நாங்கள் பல சினிமா தியேட்டர்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், புதிதாக தியேட்டர் நடத்த உரிமம் வழங்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் எங்கள் மனு தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து, அவர்களுடைய மனுக்களை நான்கு வாரத்துக்குள் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்பிஐ நிறுவனத்துக்கு புதிதாக 9 தியேட்டர்கள் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications