டியர் பாசஞ்சர்ஸ், எல்லோரும் கையை மேலே தூக்குங்க.. நடுவானில் ஸ்பைஸ்ஜெட் நடத்திய யோகா
சென்னை: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நேற்று தனது விமானங்களில் யோகா தினத்தைக் கொண்டாடி அசத்தியது.
ஈஷா பவுண்டேஷனுடன் இதற்காக அது இணைந்து யோகாசனப் பயிற்சியை ஓடும் விமானத்தில் செய்து பயணிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த யோகா பயிற்சியில் ஈஷா பவுண்டேஷன் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து விமான ஊழியர்களும், பயணிகளும் யோகா செய்து மகிழ்ந்தனர்.

முதலாவது யோகா தினம்
நேற்று உலகம் முழுவதும் முதலாவது சர்வதேச யோகா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் நேற்று எங்கு பார்த்தாலும் யோகா,. யோகா, யோகாதான்.
|
விமானங்களிலும் கொண்டாட்டம்
இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது விமானங்களிலும் நேற்று யோகா தினத்தைக் கொண்டாடியது. இதற்காக யோகா பயிற்சியாளர்கள் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் யோகா பயிற்சி அளித்தனர்.

சின்னச் சின்ன பயிற்சி
சின்னச் சின்ன ஆசனங்களை ஈஷா பவுண்டேஷனைச் சேர்ந்த யோகா மாஸ்டர்கள் சொல்லச் சொல்ல அதை விமான ஊழியர்களும், பயணிகளும் செய்தனர்.

ஜாலியான டிராவல்
வழக்கமான டிராவல் ஆக இல்லாமல் யோகாவுடன் கூடிய டிராவலாக அமைந்ததை பயணிகளும் மிகவும் ரசித்தனர். ஜாலியாக அனுபவித்து யோகா செய்து மகிழ்ந்தனர்.

ஸ்டிரஸ் குறைந்தது
இதுகுறித்து விமான நிறுவன பொது மேலாளர் அஜய் ஜஸ்ரா கூறுகையில், வழக்கமான பயண டென்ஷன், பதட்டம் ஆகியவை குறைந்து பயணிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். உடல் வலி, முதுகு வலி உள்ளிட்டவையும் கூட நேற்று பயணிகளுக்கு ஏற்படவில்லை என்றார்.

குறிப்பிட்ட விமானங்களில்
சில நீண்ட தூர விமானங்களில் மட்டும் இந்த யோகா செஷனை நடத்தியது ஸ்பைஸ்ஜெட். இதற்காக 50 ஈஷா யோகா மாஸ்டர்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு விமானத்திலும் 10 நிமிடம் இந்த யோகா வகுப்பு நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications