அதெப்படி மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேரலாம்? பீட்டர் அல்போன்ஸ் கொந்தளிப்பு
சென்னை: மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக கட்சி கூட்டணியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்ததில் இக்கட்சியின் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை பீட்டர் அல்போன்சும் ஒப்புக்கொண்டுள்ளார்.
வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவோடு கூட்டணி அமைக்க ஆசை கொண்டிருந்தது. ஆனால், வாசன் கட்சிக்கு 15 இடங்கள் வரை ஒதுக்கி தர ஜெயலலிதா முன்வந்ததாகவும், ஆனால், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிபந்தனைக்கு வாசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து வந்தார். திமுகவோடு கூட்டணி அமைக்க பீட்டர் அல்போன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், வாசனுக்கு அதில் விருப்பமில்லையாம்.
இந்நிலையில், மக்கள் நல கூட்டணியில் இணைய வாசன் விரும்பியுள்ளார். கொள்கை ரீதியாக இந்த கூட்டணி நமக்கு உடன்படும் என்று வாசன் எடுத்து கூறியுள்ளார். இதற்கு மூத்த தலைவர் ஞானதேசிகன் ஆதரவு கொடுத்தபோதிலும், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவருக்கும் இதில் உடன்பாடு இல்லை என்று தெரிகிறது.
ம.ந.கூவுக்கு சென்றால், வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தை அவர்கள் இருவரும் எழுப்பியுள்ளனர். காங்கிரசுக்கே திரும்பி செல்லலாமா என்று கூட பீட்டர் அல்போன்சும், பாலசுப்பிரமணியமும் யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில்தான் தேனாம்பேட்டையில் வாசனை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தபோது, ஞானதேசிகன் மட்டுமே வாசனுடன் இருந்தார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பாலசுப்பிரமணியம் இருவரும் இல்லை.
மக்கள் நல கூட்டணியில், வாசன் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், பீட்டர் அல்போன்ஸ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இக்கூட்டணியில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கூட்டணி அமைப்பதால் தமாகா தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்று கூறினஆர். இதனால் தமிழ் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications