'ப்ளூ வேல்' விளையாட்டை விடுங்க.. 'பிங்க் வேல்' விளையாடுங்க.. நெட் உலகின் அடுத்த பரபரப்பு
உயிர்க்கொல்லும் விளையாட்டான 'ப்ளூ வேல்' கேமிற்கு பதிலாக அன்பைப் பரப்பும் 'பிங்க் வேல்' ஆன்லைன் கேம் அறிமுகமாகியுள்ளது. அதனை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் டவுன்லோடு செய்து விளையாடி வருகிறார்கள் என்று
Recommended Video

சென்னை: உலகமெங்கும் 130 பேரின் உயிரைப்பறித்த 'ப்ளூ வேல்' ஆன்லைன் கேம், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், சகமனிதர்கள் மீது அன்பு செலுத்த வைக்கும், 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டு இணையதள உலகில் வைரலாகியுள்ளது.
ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது 'ப்ளூ வேல்' என்னும் விளையாட்டு, தற்பொழுது உலக டீன் ஏஜ் இளைஞர்களின் உயிரைக் காவு வாங்கும் விளையாட்டாக பூதாகரமாக மாறியுள்ளது.
முழுக்க மனோதத்துவ ரீதியில் இயங்கும் இந்த கொடூர கேம், 50 டாஸ்க்குகளை கொண்டது. முதலில் சாதாரணமாக தொடங்கும் கேம், தனியாக திகில் திரைப்படம் பார்த்தல், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல், இடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று நீளும்.
பின்னர் உடலில் ரத்த காயங்களை உண்டாக்கி கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தினை உடலில் வரைதல் என்று வலுவடைந்து இறுதியாக ஐம்பதாவது டாஸ்க்காக கேம் விளையாடும் நபரை தற்கொலை செய்து கொள்ள தூண்டும்.

அன்பை பரப்பும் 'பிங்க் வேல்'
கொடூர விளையாட்டுக்கு எதிராக சக மனிதர்கள் மீதான அன்பினை பரப்பும் 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டும் இணையதள உலகின் பயன்பாட்டில் உள்ளது. இந்த விளையாட்டினை பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் வடிவமைத்துள்ளார்.

இதிலும் 50 டாஸ்க்
ப்ளூ வேல் போலவே இந்த விளையாட்டும் 50 டாஸ்க்குகளை கொண்டதாகும். ஆனால் இந்த விளையாட்டு ஒவ்வொரு படியிலும் எந்த வித ஆபத்தும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக உங்கள் உடலில் எளிதில் அழியக்கூடிய மார்க்கர் பேனா மூலமாக உங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயத்தினை எழுதிக் கொள்ளலாம்.

தாத்தா பாட்டியிடம் பேசுதல்
இதர டாஸ்க்குகளாக உங்களது தாத்தா, பாட்டியினை போனில் அழைத்துப் பேசுதல், கண்ணாடியினைப் பார்த்து உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றுதல், தெருவில் நின்று உங்களை நீங்களே விரும்புவதாக உரக்கச் சொல்லுதல் ஆகியவை அடங்கும்.

உயிரைக்காக்கும் டாஸ்க்
ஐம்பதாவது டாஸ்க்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் 'ப்ளூ வேல்' போல் இல்லாமல், மற்றொரு உயிரை நீங்கள் முயற்சி செய்து காக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும்.

5 லட்சம் பேர் டவுன்லோடு
அன்பை பரப்புதலே அடிப்படை என்று கூறும் இந்த விளையாட்டினை தற்பொழுது வரை, உலகில் 5,00,000 பேர் டவுன்லோட் செய்துள்ளனர். முகநூலில் மூன்று லட்சம் பேரும், இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில் நாற்பது ஆயிரம் பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications