இலங்கைச் சிறையிலிருந்த 46 தமிழ் மீனவர்கள் விடுதலை!
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 46 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 11 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 46 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (25ஆம் தேதி) ஊர்க்காவல் துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் உடனடியாக இந்திய கடற்படையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பபட்டது.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, படகுகளை விடுவிப்பது குறித்து நாளை மறுதினம் (27ஆம் தேதி) முடிவெடுக்கப்படும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக மீனவர்கள் 46 பேரும் நாளை அல்லது நாளை மறுதினம் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications