அதிமுகவால் ஸ்ரீதர் வாண்டையாருக்கு தர்ம சங்கடம்
சென்னை: மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா, சிவகங்கை தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதா என்ற, குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் உறவினர் ஸ்ரீதர் வாண்டையார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
பல தேர்தல்களில், அதிமுகவுக்கு ஆதரவாக வாண்டையார் பிரசாரம் செய்து வந்தார். 2011 சட்டசபை தேர்தலில், தனது கட்சிக்கு அதிமுக சீட் தராததால், திமுக கூட்டணியில் இணைந்து, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட வாண்டையார் வெறும், 2,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திமுகவினர் மீது புகார்
திமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதே தோல்விக்கு காரணம் என்று உள்ளூர் நிர்வாகிகள் மீது, அக்கட்சி தலைமையிடம் புகார் செய்தும், தலைமை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

லோக்சபா தேர்தல்
இதற்கிடையில், 2014 லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்த வாண்டையார், ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக வெற்றி பெற்றது. அதே மகிழ்ச்சியில், வரும் சட்டசபை தேர்தலில், தனது கட்சிக்கு தொகுதி ஒதுக்கும்படி, ஜெயலலிதாவை சந்தித்து கடிதம் கொடுத்தார் வாண்டையார்.

தனித்து போட்டி
ஆனால், வாண்டையார் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஸ்ரீதர் வாண்டையார், சிவகங்கை தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்து, அங்கு முகாமிட்டுள்ளார்.

குழப்பம்
இந்நிலையில், அதிமுக தலைமை உத்தரவின்படி, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் தலைமையில், அதிமுக வேட்பாளர்கள் சிலர் கவரப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதர் வாண்டையார் வீட்டுக்கு சென்று, ஆதரவு கேட்டதோடு, கட்சி தலைமை கூறிய தகவலையும் தெரிவித்தனர். எனவே ஸ்ரீதர் வாண்டையார், தற்போது சிவகங்கை தொகுதியில் தனித்து போட்டியிடலாமா அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா என்ற இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
ஐயா கப்பல்ல வேலைன்னு.. அந்த ’வளந்தவன்’ சொன்னதை நம்பி! வேலுமணி போனை எடுக்காத ’ஷா’.. அதிருப்தி அதிமுக! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்.. பாவம்! தவெகவை பங்கம் செய்த அதிமுக ஜெயக்குமார் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications