தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை செய்தன இலங்கை நீதிமன்றங்கள்... விசைப்படகுகளை விடுவிக்க மறுப்பு
கொழும்பு : இலங்கைச் சிறைகளிலிருந்த 40 தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றங்கள் திங்கட்கிழமை விடுதலை செய்து உத்திரவிட்டுள்ளன.
கடந்த ஜுன் மாதம் 4 ஆம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி 3 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்து 14 ராமேசுவரம் மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் 6 முறை காவல் நீட்டிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர்.
அது போல கடந்த ஜுன் 21 அன்று நாகை அக்கரைப் பேட்டையைச் சார்ந்த 17 மீனவர்கள், காரைக்காலைச் சார்ந்த 9 மீனவர்கள் என 26 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய ராமேஸ்வரம், நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் திங்கட்கிழமை மன்னார் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் 40 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை நீதிபதிகள் விடுவிக்க மறுத்து விட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் கடற்தொழில் இயக்குநரகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு புதன்கிழமை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications