கேபிள் வயரால் அடித்து விரட்டப்பட்ட நாகை மீனவர்கள்.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்துவிரட்டினர்.
நாகை: கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த 2 நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குள் சென்று வருகின்றனர். அப்போதும் தங்களுக்கு போதுமான மீன்கள் கடலில் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

படகுகளில் மூலம் செல்லும் மீனவர்களும் மீன்வரத்து கடலில் குறைவாக இருப்பதாக குறைந்த மீன்களுடன் கரை திரும்பி வருகின்றனர். எனினும் தங்களது வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள படகில் மீன்பிடிக்க சென்றால், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து விரட்டியடிக்கப்படும் அவலம் மீண்டும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது.
ஆறுகாட்டுத்துறை பகுதியிலிருந்து சசிகுமார், ஆறுமுகம் ஆகியோரின் படகுகளில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்தபோது, அப்போது ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடிக்க தொடங்கினர்.
அத்துடன் தங்களிடமிருந்த கேபிள் வயரை கொண்டே மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் எதிர்பாராத தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். தாக்குதல் காரணமாக கரையோர மீனவர்கள் கடும் கொந்தளிப்பிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுகிறதே என்ற அச்சத்திலும் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications