ஆயுத குவியல் சிக்கிய பரபரப்புக்கு இடையே ராமேஸ்வரத்தில் இலங்கை மர்ம நபர் கைது
ராமேஸ்வரத்தில் ஆயுதக் குவியல் கிடைத்துள்ள பரபரப்பு அடங்குவதற்குள் இலங்கையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகுடன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடத்தில் மீனவர் எடிசனின் வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக குழி தோண்டியபோது அங்கு குவியல் குவியலாக துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை போரின்போது ராமேஸ்வரத்தில் முகாம் அமைத்த விடுதலை புலிகள் அமைப்பினுடைய ஆயுதங்களாக இவை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் உச்சிபுளி வலங்காபுரி கடற்கரை பகுதியில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகில் சுற்றித் திரிந்தார்.
அவரை போலீஸார் கைது செய்தனர். அந்த பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தாரா? என்றும் அகதிகளை ஏற்றிச் செல்ல வந்தவரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் பெருமளவு ஆயுதக் குவியல் கிடைத்த நிலையில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications