நீல டி-சர்ட் போடு, அந்த சாமி படம் வை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 'சீனி'யின் ஜோதிடர்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் ஜோதிடர் அணியின் கேப்டன் டோணிக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சில மூடப் பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் மாமியார், மருமகள் சம்பந்தப்பட்ட டிவி சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இலங்கை பந்து வீச்சாளர் மலிங்காவோ ஒரு போட்டியில் பந்தை குறைந்தது 50 முறையாவது முத்தமிடுவார். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் ஜோதிடர் வெங்கடேசன் கார்த்திகேயன் கேப்டன் டோணிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.

சாமி படங்கள்
சென்னை அணி வீரர்களின் உடைமாற்றும் அறையில் குறிப்பிட்ட சுவர்களில் குறிப்பிட்ட சில தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைக்க ஜோதிடர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாரே செய்துள்ளார்களாம்.

நீல டி-சர்ட்
சென்னை அணி விளையாடும் போது அணி நிர்வாகத்தினர் நீல நிற டி-சர்ட் அணிய வேண்டும், எதிர் அணியினருக்கு சிவப்பு நிற துண்டுகள் கொடுக்க வேண்டும் என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

குருநாத்
ஐபிஎல் பெட்டிங்கில் சிக்கி கைதான குருநாத் மெய்யப்பனை சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளை நேரிலோ அல்லது டிவி, கம்ப்யூட்டரிலோ பார்க்கவே கூடாது என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார். மெய்யப்பனும் அவ்வாறே நடந்துள்ளார். அவர் பார்க்காத 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது.

தரம்சாலா
2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சென்னை அணி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் இருந்து காலிறுதி போட்டி நடக்கும் மும்பைக்கு செல்வதற்கு பதில் சென்னை வந்துள்ளது. காரணம் அன்றைய தினம் மும்பைக்கு செல்ல நல்ல தினம் இல்லையாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டோணி தான் ஜோதிடரின் அறிவுரையை நாடினாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications