'ஆர்டினரி' தொகுதியான 'அம்மா' தொகுதி ஸ்ரீரங்கம்!
ஸ்ரீரங்கம்: தமிழக முதல்வர் தொகுதி என்ற விஐபி அந்தஸ்தினை கடந்த 4 ஆண்டுகளாக பெற்றிருந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அந்த அந்தஸ்தினை இழந்துள்ளது.
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது ஸ்ரீரங்கம் தனது பூர்வீகம் என்றும், வெற்றி பெற்றால் ஸ்ரீரங்கம் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றும் கூறி பிரசாரம் செய்தார். பின்னர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று, முதல்வராகவும் பதவியேற்றார்.

இதையடுத்து இந்த தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றது. தமிழக அரசின் பல்துறைகளும், ஸ்ரீரங்கம் தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதி வேகமாக செயல்படுத்தினர. பல நலத் திட்டங்களும், ஸ்ரீரங்கத்திற்குக் கிடைத்தன.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்தார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், வி.ஐ.பி தொகுதி என்ற அந்தஸ்தை இந்த தொகுதி இழந்தது.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் ஒரு வி.ஐ.பி வேட்பாளார்தான் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வளர்மதி எம்.எல்.ஏவாகியுள்ளதால் விஐபி அந்தஸ்தை இழந்துள்ளது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications