புதுச்சேரி: 10ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 3 பேர் முதலிடம்
Subscribe to Oneindia Tamil

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் புதுவை இமாகுலேட் பள்ளி மாணவன் அஜேஸ், குளுனி பள்ளி மாணவி ஹர்ஷினி, பெட்டிசெமினார் பள்ளி மாணவர் சித்தார்த் சவுரியா ஆகியோர் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
அதே போல 498 மதிப்பெண்களுடன் 4 மாணவர்கள் 2வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் 497 மதிப்பெண்கள் பெற்று 8 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 91.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications