கருணாநிதி மறைவு.. ராஜாஜி ஹாலில் வந்து இறங்கிய மேடை அமைக்கும் உபகரணங்கள்
சென்னை ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளதால் திமுக தொண்டர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இதைத்தொடர்ந்து ராஜாஜி ஹாலில் அவரது உடலை வைப்பதற்கான மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தயாராக இருக்க உத்தரவு
சென்னை மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

ஆடிப்போன தொண்டர்கள்
இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு ஆடிப்போயினர் திமுக தொண்டர்கள்.

மேடை அமைக்கும் வாகனங்கள்
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன. ஏராளமான நேரலை வானங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

அன்றும் வெளியான தகவல்
கடந்த 29 ஆம் தேதி இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்த போது கூட ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் பணிகளுக்காக உபகரணங்கள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

கோபாலபுரம், சிஐடி காலணி
இந்நிலையில் இன்று அது உண்மையாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் கருணாநிதியின் உடல் பின்னர் சிஐடி காலணியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பார்வை
பின்னர் நள்ளிரவில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படும் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications