உக்கிர போஸ்டர் யுத்தம் நடத்தும் மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரி ஆதரவாளர்கள்
சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்களும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களும் உக்கிரமான போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து தற்காலிகமாக மு.க. அழகிரி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மு.க. அழகிரி, திமுக தலைமையை விமர்சித்து வருகிறார்.

கொடும்பாவி எரிப்பு
இந்நிலையில் மு.க. ஸ்டாலின், 3 மாதத்தில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட தகவல் ஸ்டாலின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மு.க. அழகிரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

கோழை அழகிரியே
அதேபோல் அழகிரிக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் வீதிதோறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் வருகின்றன. சென்னை புழல் ஒன்றிய திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், 90 வயது தலைவர் கலைஞரை மிரட்டும் கோழை அழகிரியே! மோதாதே! எங்கள் தலைவரிடம்!! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்ருகள்..
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில், சத்ருகளுக்கு சத்ரியர்... சகுனிகளுக்கு சாணக்கியர்.. தெய்வம் எதற்கு.. கோவில் எதற்கு../ உந்தன் புன்னகை ஒன்றே போதும் என்றும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்ய முடியும், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீழ்பிடித்த புண்
சென்னையில் ஒட்டப்பட்ட மற்றொரு போஸ்டரி, சீழ் பிடித்து புரையோடிய புண்ணை அறுத்தெறியுங்கள். அறுவை சிகிச்சையின்போது சிறிது வலி இருக்கும். மிகக் குறைந்த அளவு ரத்தமும், சீழுடன் வெளியேறும். அறுவை சிகிச்சைக்கு பின் வலியிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். உடல் மேலும், வலிமையும், வலிவும் பெறும். உடனே தேவை அறுவை சிகிச்சை என்று அழகிரிய கட்சியைவிட்டே நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications