மெட்ரோ ரயிலில் உடன் பயணித்தவரை அறைந்தாரா ஸ்டாலின்?.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று பயணம் செய்தபோது, சக பயணி கன்னத்தில் அடித்ததை போன்ற வீடியோ, போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில், கோயம்பேடு-ஆலந்தூர் இடையே முதாலவது, மெட்ரோ ரயில் இயக்கம் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்ற அடிப்படையிலும், மெட்ரோ ரயிலின் வசதிகள் குறித்து அறியவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பயணித்தார்.

மீடியாக்கள் குவிந்தன

மீடியாக்கள் குவிந்தன

முதல்வர் ஜெயலலிதாவே, இந்த திட்டத்தை நேரில் வந்து தொடங்கி வைக்காமல் வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் தொடங்கி வைத்த நிலையில், ஸ்டாலின் நேரில் சென்றதால் ஊடகங்கள் அதை மிகவும் முன்னிலைப்படுத்தி செய்தியாக காண்பித்தன. சில டிவி சேனல்கள் அவர் பயணத்தை லைவ் காண்பித்தன.

பயண அனுபவம்

பயண அனுபவம்

மெட்ரோ ரயிலில் நின்று கொண்டே பயணித்த ஸ்டாலினுக்கு, உட்கார்ந்திருந்த பயணிகள் பலரும் சீட் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அவற்றை மறுத்த ஸ்டாலின், அவர்களை அமரச் செய்துவிட்டு மெட்ரோ பயண அனுபவம் குறித்து கேட்டறிந்தார்.

கன்னத்தில் அறை?

கன்னத்தில் அறை?

அப்போது, 'தளபதி ஸ்டாலின் வாழ்க' என்று உடன் பயணித்த திமுக தொண்டர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இந்நிலையில், ஸ்டாலின் அருகே ஒட்டினாற்போல நின்ற ஒரு வாலிபரை ஸ்டாலினுடன் வந்த திமுகவினர் தள்ளிப்போகுமாறு கூறினர். அவர் சற்று தயங்கியபோது, ஸ்டாலின் அந்த வாலிபரின் கன்னத்தில் தனது கையால் அறைந்து, தள்ளிப்போகுமாறு கூறுவது போல வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

அந்த வாலிபரும் திமுக தொண்டர்தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பொது இடத்தில் அவரை கன்னடத்தில் அடித்த செயல் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிமுக ஆதரவு சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை கடுமையாக கண்டித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுகுடித்த வாலிபர்

மதுகுடித்த வாலிபர்

திமுக தரப்பில் கேட்டபோது, அந்த வாலிபர் மது குடித்துவிட்டு தகராறு செய்ததால், ஸ்டாலின் கண்டித்து அனுப்பியதாக பதில் கிடைத்தது. கடந்த சட்டசபை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கை ஓங்கிய விஜயகாந்த்

கை ஓங்கிய விஜயகாந்த்

இதனிடையே, ஸ்டாலினை தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தை பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றனர். அப்போது அவர்களிடம் "என்கிட்ட எடுக்குற பேட்டிய நீங்க போடவாப்போறீங்க. ஆளும் கட்சிக்கு எதிரானாதான் நீங்க போட மாட்டீங்களே" என்று கூறுகிறார் விஜயகாந்த். அப்போது பக்கத்தில் யாரோ தொண்டர் தள்ளுமுள்ளுவில் ஈடுபடவே, அவரை நோக்கி நாக்கை துருத்தி, கையை அடிக்க ஓங்கியுள்ளார் விஜயகாந்த். இந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+