நாடாளுமன்றத் தேர்தலில் திமுக– பாமக கூட்டணி?: மு.க.ஸ்டாலின்–அன்புமணி சந்திப்பு
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாசும் சமீபத்தில் சந்தித்து பேசிக்கொண்ட சம்பவம் அரசியல் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கான அச்சாரமாக இவர்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் தயாரித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள படம் என்றென்றும் புன்னகை. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது.
ஒரே தியேட்டரில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினரும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் பார்த்து ரசித்தனர். அப்போது மு.க.ஸ்டாலினும் அன்புமணியும் சந்தித்து பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இரு தலைவர்களிடமும் யார் யார் வருகிறார்கள் என்பது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இருவரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் கலந்து கொண்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கூட்டணி வியூகம்
தி.மு.க. தரப்பில் பா.ஜனதா, காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் சூழ் நிலையில் மு.க.ஸ்டாலின்- அன்புமணி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே தி.மு.க-பா.ம.க. கூட்டணிக்கான முயற்சிகளும் தொடங்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

பாமக – பாஜக
அதே சமயம் பா.ம.க.-பா.ஜனதா இடையே கூட்டணிக்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி டெல்லியில் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் ஸ்டாலின் - அன்புமணி சந்தித்து நிகழ்ந்துள்ளது.

ராஜ்யசபா தேர்தல்
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவளிக்கும்படி தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அன்புமணியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.

கூட்டணி கிடையாது
ஆனால் பா.ம.க. ஆதரவளிக்க மறுத்துவிட்டது. அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் வரும் தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக – பாமக விரிசல்
அன்றுமுதல் திராவிட கட்சிகளை பா.ம.க. வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் தி.மு.க- பா.ம.க. இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மு.க.ஸ்டாலின், அன்புமணி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது. ஆனால் படத்தை தயாரித்த தமிழ்குமரன் கூறும்போது, இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றார்.

யார் அணியில் யார்?
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனது நிலைப்பாட்டினை உறுதியாக அறிவித்துவிட்டது. அதேசமயம் திமுகவும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைக்கவில்லை என்று கூறிய கருணாநிதி கூட பாமக உடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications