சபாநாயகருக்கு எதிராக திமுகவினர் முழக்கம்.. சட்டசபையில் மன்னிப்பு கேட்டார் ஸ்டாலின் !
சென்னை: சில திமுக உறுப்பினர்களின் நடவடிக்கையால் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் இன்னும் சொல்லபோனால் மன்னிப்பு கூட கேட்க கடமை பட்டிருக்கிறேன் என எதிர்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் கூறினார்.
தமிழக பட்ஜெட் கடந்த ஜூலை 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 29ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார். இந்நிலையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று செவ்வாய்கிழமை மீண்டும் கூடியது. அப்போது கைத்தறித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று திருவெறும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்முதலாக உரையாற்றினார்.
மகேஷின் கன்னி பேச்சின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கடி குறுக்கிட்டார். ஓ.எஸ்.மணியனின் குறுக்கீட்டிற்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து சபாநாயகருக்கு எதிராகவும் ஓ.எஸ்.மணியனுக்கு எதிராகவும் கடும் கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் ஆவேசமான சபாநாயகர், இதற்கு எதிர்கட்சி தலைவரும், துணை தலைவரும் என்ன சொல்ல போகிறீர்கள் என ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தாம் ஏற்கனவே சொன்னது போல எதிரி கட்சியாக இல்லாமல் எதிர்கட்சியாக மட்டுமே செயல்பட்டு வருவதாக சுட்டிகாட்டினார். அந்த உறுதியை மீண்டும் அளிப்பதாகவும் கூறினார்.
மேலும் சில நேரங்களில் திமுக உறுப்பினர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
சில நேரங்களில் தங்களுடைய மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நேரங்களில் எங்களது உறுப்பினர்கள் சில கருத்துக்களை தெரிவிக்க முன் வருகிறார்கள். அப்போது நீங்கள் அனுமதிக்காததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தவறுதலாக கூட பேசியிருக்கலாம்.
சில திமுக உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையால் நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இன்னும் சொல்லப்போனால் மன்னிப்பு கேட்டு கொள்ளவும் காத்திருக்கிறேன் என வெளிப்படையாக கூறினார்.
-
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications