110 விதியின் கீழ் ஜெ. அறிவித்த திட்டங்கள் என்ன ஆச்சு?: சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
சென்னை: சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக அரசு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. அவை கூடியதும் முதலில் மறைந்த உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் நடைபெற்றது.

பின்னர், தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரை 5 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது குறித்து சபாநாயகர் தனபாலிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பின்னர் அவைக்குத் திரும்பிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிக்கப் பட்ட திட்டங்களின் நிலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்த தமிழக அரசு அதை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தது என அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications