திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மூலம் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

அப்போது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் உரிய ஊதியம் கிடைக்கவில்லை. பொறியியல் பட்டப்படிப்பு படித்துவிட்டு கடைகளில் விற்பனையாளராக பணியாற்ற வேண்டிருக்கிறது என பலர் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் செயலற்ற தன்மையால் பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். கடந்த திமுக ஆட்சியில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம். அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அரசுப் பணியிலும் பல்லாயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வெறும் அறிவிப்பாகவே உள்ளன. புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 4 தலைவர்கள் வந்துள்ளனர். ஆனால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் நிறுவனங்களாக மாற்றப்படும். நீங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் உங்கள் வாழ்வில் மாற்றத்தை திமுக ஏற்படுத்தும் என ஸ்டாலின் கூறினார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications