ஜெயலலிதா பதவியேற்பு விழா... திமுக எம்.எல்.ஏக்கள் புடை சூழ ஸ்டாலின் பங்கேற்றார்
சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், திரையுலகினர், பல்துறைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டசபையின் முதல் வலிமையான பிரதான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை திமுக ஏற்று தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது. அதன்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவருடன் பொன்முடி, எ.வ.வேலு, கேபிபி சாமி, கு.பிச்சாண்டி, ப.ரங்கநாதன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கு.க செல்வம், சுதர்சனம், மு.க.மோகன், தாயகம் கவி உள்ளிட்ட அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பதவியேற்பில் ஸ்டாலின் கலந்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அவரும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் கலந்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications